திருவள்ளூர் அருகே திமுக எம்எல்ஏ விஜி ராஜேந்திரன் வருவதற்கு முன்பே நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் நாசர் திறந்து வைத்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
புதுமாவிலங்கை கிராமத்தில் அரசின் சம்பா பருவத்திற்கான நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் நாசர் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது வந்த எம்எல்ஏ விஜி ராஜேந்திரன், கோபமாகக் காணப்பட்ட நிலையில், சிறப்புரை ஆற்றாமல் அமர்ந்து கொண்டிருந்தார்.
அப்போது கூட்டுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு உணவு துறையின் சார்பில் நன்றி தெரிவித்த போது எம்எல்ஏவின் பெயரை கூறவில்லை எனத் தெரிகிறது.
இதனால் கோபமடைந்த எம்எல்ஏ விஜி ராஜேந்திரன் அங்கிருந்து புறப்பட்டார். இதனையடுத்து, தான் இறந்துவிட்டதாக நினைத்து விட்டீர்களா என மாவட்ட ஆட்சியர் பிரதாப்பிடம் ஆவேசமாகக் கூறிவிட்டு சென்றார். இதனால் சிறிது நேரம் அங்குச் சலசலப்பு ஏற்பட்டது.
















