மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி கழிவுநீர் தேங்கியுள்ளதால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கோயில் அருகே உள்ள நான்கு சக்கர வாகன காப்பகம், கிழக்கு கோபுரம், அம்மன் சன்னதி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லக்கூடிய வழிகளில் கழிவு நீர் தேங்கி காணப்படுகிறது.
இதனால் பக்தர்கள் முகம் சுளித்த வாரே கோயிலுக்குச் சென்று வருகின்றனர். அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் சொந்தத் தொகுதியான மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மீனாட்சி அம்மன் கோயில் அருகே கழிவுநீர் தேங்கி இருப்பது பக்தர்கள் மத்தியில் வேதனையை உருவாக்கியுள்ளது.
இந்நிலைய் கழிவுநீர் தேங்காத வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















