நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே நிலத்தகராறில் பெண்கள் மற்றும் ஆண்கள் ஒருவருக்கொருவர் சரமாரியாகத் தாக்கி கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
ஆயக்கவுண்டம்பாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்த சுமதி என்பவருக்கும் பக்கத்து தோட்டத்துக்காரரான முத்துசாமி, ராஜம்மாள், மோகன்ராஜ் ஆகியோருக்குமிடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில் மோகன்ராஜ் அரிவாளுடன் சுமதி வீட்டின் அருகே உள்ள மரங்களை வெட்டியுள்ளார். இதுகுறித்து சுமதி கேள்வி கேட்டதால் ஆத்திரமடைந்த முத்துசாமி, மோகன்ராஜ், ராஜம்மாள் ஆகியோர் நிலம் தொடர்பாகப் பேசித் தகராறு செய்துள்ளனர்.
அப்போது வாய்தகராறு முற்றி கைகலப்பாக மாறியதால் சுமதி, சுகன்யா, குணசேகரன் ஆகியோர் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த மூவரும் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
















