2026 எப்படி இருக்கும்? : பகீர் கிளப்பும் பாபா வங்காவின் கணிப்புகள்!
Jan 14, 2026, 01:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

2026 எப்படி இருக்கும்? : பகீர் கிளப்பும் பாபா வங்காவின் கணிப்புகள்!

Murugesan M by Murugesan M
Dec 31, 2025, 09:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2026ம் ஆண்டு எப்படி இருக்கும் என்பது குறித்து மறைந்த தீர்க்கதரிசியான பாபா வங்கா பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். அது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

ஒவ்வொரு புதிய வருடம் தொடங்கும்போது சில பெயர்கள் அதிகளவில் உச்சரிக்கப்படும். அத்தகைய பெயர்களில் ஒன்றுதான் பாபா வாங்கா. புதிய வருடத்தில் உலகளவில் என்ன மாற்றங்கள் நிகழும், எத்தகைய அரசியல் மாற்றங்கள் ஏற்படும், இயற்கை சீற்றங்கள் பேரழிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்தெல்லாம் பாபா வாங்கா என்ன கூறியுள்ளார் என்ற தகவல்கள் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் பேசுபொருளாகும்.

அதன்படி 2026ம் ஆண்டு குறித்து அவர் தெரிவித்த ஆருடங்கள் தற்போது கவனம் பெற்று வருகின்றன. பாபா வாங்கா என்பவர் யார் என்றே தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம். பல்கேரியாவில் 1911ம் ஆண்டு பிறந்த ஒரு தீர்க்கதரிசிதான் பாபா வாங்கா. சிறு வயதிலேயே பார்வையை இழந்த இவர், தனது உள்ளுணர்வின் மூலம் எதிர்காலத்தில் நிகழவுள்ளவற்றை முன்னரே கணித்து கூறியதன் மூலம் கவனம் பெற்றார்.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல், ஒபாமா அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்றது, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியது போன்றவற்றை இவர் முன்னரே கணித்து கூறியிருந்ததாக நம்பப்படுகிறது. இந்தாண்டுகூட ஜப்பானில் ஏற்பட்ட மிகச் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவற்றை அவர் முன்னரே கணித்திருந்தார்.

இந்தச் சூழலில், 2026ம் ஆண்டுகுறித்த அவரது ஆருடங்கள் தற்போது அதிகளவில் படிக்கப்பட்டு வருகின்றன. 2026ம் ஆண்டு ரஷ்ய அதிபர் புதினின் வீழ்ச்சி தொடங்கும் எனப் பாபா வங்கா தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 21 ஆண்டுகளுக்கு மேலாகப் புதின், ரஷ்யாவின் அதிபராக இருந்து வருகிறார். இந்தக் காலக்கட்டத்தில் பல நாடுகளில் ஆட்சி மாற்றங்கள், ஆட்சி கவிழ்ப்புகள், அரசியல் படுகொலைகள் எனப் பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. ஆனாலும், ரஷ்ய அதிபர் மட்டும் மாறவில்லை.

இந்தச் சூழலில், அடுத்தாண்டு ரஷ்யாவில் புதிய தலைவர் ஒருவரின் எழுச்சி இருக்கும் எனப் பாபா வங்கா கணித்துள்ளார். இதன்மூலம் புதினின் ஆட்சி முடிவுக்கு வரக்கூடும் எனச் சிலர் கருதுகின்றனர். அதேபோல, அடுத்தாண்டு உலக நாடுகளிடையே கடுமையான போர் மூளும் எனக் கூறப்படுகிறது. தைவானை சீனா கைப்பற்ற சாத்தியம் உள்ளதாகவும், ரஷ்யா – அமெரிக்கா இடையேயான மோதல் புதிய உச்சத்தை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக உலகளாவிய போர் உருவாகலாம் என பாபா வங்கா கணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது 3ம் உலகப்போராக இருக்கும் எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி அடுத்தாண்டு மேலும் அதிகரிக்கும். அதன் மூலம் மனித குலம் மீது ஏ.ஐ. ஆதிக்கம் செலுத்த தொடங்கும் எனவும் பாபா வங்கா கணித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், அடுத்தாண்டு நவம்பர் மாதம் பூமியின் வளிமண்டலத்திற்கு விண்கலம் ஒன்று வந்து சேரும். அதன் மூலம் வேற்றுகிரகவாசிகள் மனிதர்களுடன் தொடர்புகொள்வார்கள் எனவும் அவரது ஆருடத்தில் கூறப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டு இயற்கை சீற்றங்களால் பூமியின் 8 சதவீத பகுதி பாதிக்கப்படும் எனப் பாபா வங்கா தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

மேலும், அடுத்தாண்டு நிதி சார்ந்த சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. பங்குச்சந்தைகள் சரிவு, நாணயங்களின் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்டவை ஏற்படும் எனவும், அதன் மூலம் தங்கத்தின் விலை மேலும் புதிய உச்சத்தை அடையும் எனவும் பாபா வங்காவின் கணிப்பு கூறுவதாகச் சிலர் தெரிவிக்கின்றனர்.

2026ம் ஆண்டு குறித்த பாபா வங்காவின் இந்த கணிப்புகளில் பெரும்பாலானவை எதிர்மறையாகவே உள்ளன. இருப்பினும், இவை அனைத்தும் நிகழும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. இந்த கணிப்புகளுக்கு மாறாக அடுத்தாண்டு போர்களற்ற, பேரழிவுகள் குறைவான, நிதி சிக்கல்கள் இல்லாத ஆண்டாகவும் அமையலாம். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags: new year 20262026What will 2026 be like? Baba Vanga's predictions that send shivers down the spineபாபா வங்காவின் கணிப்புகள்2026 எப்படி இருக்கும்?
ShareTweetSendShare
Previous Post

Su-57E போர் விமானம் : இந்தியாவிலேயே தயாரிக்க விருப்பம் தெரிவித்த ரஷ்யா!

Next Post

இனி ஒரு நாளைக்கு “25 மணிநேரம்” : வெளியான புதிய ஆய்வு முடிவு – சிறப்பு தொகுப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies