காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் தங்களது புகார்களை அடுக்கடுக்காகக் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி தலைமையில் நடப்பு ஆண்டின் கடைசி மாமன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஒரே நேரத்தில் 62 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, பாஜகவை சேர்ந்த 21வது வார்டு உறுப்பினர் விஜிலா, 46வது வார்டு உறுப்பினர் கழல் விழி ஆகியோர் தங்களது வார்டுகளில் உள்ள குறைகளை தெரிவித்தனர்.
இதனையடுத்து, 11,16,41வது வார்டு உறுப்பினர்களும் அடுக்கடுக்காகப் புகார்களை தெரிவித்தனர்.
இதனிடையே, புகார் தெரிவித்துவிட்டு மாமன்ற உறுப்பினர்கள் ஒன்றின் பின் ஒன்றாகச் சென்றதால் கூட்டம் முடிவதற்கு முன்பே கூட்ட அரங்கு காலியாகக் காணப்பட்டது.
















