தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை அருகே பைபர் படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர்கள் 3 பேர் காயமடைந்தனர்.
தூத்துக்குடி மாதவன் நாயர் காலனி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 3 பேர் பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது புதிய துறைமுக கடற்கரை அருகே படகின் காத்தாடியில் வலை சிக்கியதில் கட்டுப்பாட்டை இழந்து அந்தப் பகுதியில் உள்ள பாறையில் மோதிப் படகு கவிழ்ந்தது.
இதில், மீனவர்கள் 3 பேரும் கடலில் தத்தளித்த நிலையில், தகவலறிந்து சென்ற கடலோர காவல் நிலைய போலீசார் மூன்று மீனவர்களையும் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
















