ரஷ்ய அதிபர் புதின் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து உலக தலைவர்களுக்குப் பரிசுகள் வழங்குவதை போன்ற ஏஐ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கென்யாவுக்கான ரஷ்ய தூதரகம் ஏஐ வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளது.
அதில், ரஷ்ய அதிபர் புதின் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து உலக தலைவர்களுக்குப் பரிசுகள் வழங்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அந்த வீடியோவில் அமெரிக்காவின் டாலர் அடையாளம் கீழே விழுந்து நொறுங்குவது போலவும், பிரதமர் மோடிக்கு ராணுவ ஜெட் விமானங்கள் வழங்கப்படுவது போலவும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு கைவிலங்கு பரிசளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது போலவும் உள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஏஐ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
















