முக்கிய பொருளாதார பாதையில் அமைந்துள்ள சோமாலிலாந்து நாட்டை அங்கீகரிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
சர்வதேச போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த செங்கடலின் நுழைவு வாயிலான ஏடன் வளைகுடா பகுதியில் இந்தச் சோமாலிலாந்து அமைந்துள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்த நாடக இந்த நாடு பார்க்கப்படுகிறது.
அந்தப் பகுதியில் எந்த நாட்டுடனும் இஸ்ரேலுக்கு பெரிய அளவிலான உறவுகள் இல்லாத நிலையில் இஸ்ரேலின் அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலின் இந்த அறிவிப்புக்குச் சோமாலிலாந்து வரவேற்பை தெரிவித்துள்ளதன் மூலம் அந்தப் பகுதியில் இஸ்ரேலிய முகாம்கள் அமையவும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன.
















