நாட்டின் பாதுகாப்பு திறனை வலுப்படுத்த சுமார் 79 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தளவாடங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில், சுமார் 79 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பீரங்கி படைப்பிரிவுக்கு வெடிமருந்து அமைப்பு, இலகு ரக ரேடார்கள். பினாகா ராக்கெட் அமைப்பிற்கான வெடிமருந்துகள் மற்றும் ராணுவத்திற்காக ஒருங்கிணைந்த டிரோன் கண்டறிதல் அமைப்பு உள்ளிட்டவரை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கடற்படைக்கு பொல்லார்ட் புல் டக் படகுகள் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்திய விமான படைக்கு வானில் உள்ள இலக்குகளை தாக்கும் ஏவுகணை, தேஜாஸ் போர் விமானத்துக்கு தேவையான உபகரணங்கள் ஆகிய தளவாடங்களும் வாங்கப்பட உள்ளன. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, நாட்டின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்துவதில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
















