‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ திட்டம் மூலமாக மாநில அரசுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என STATE BANK OF INDIA தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், விக்சித் பாரத் ஜி ராம் ஜி சட்டத்தின் மூலம், மாநில அரசுகளுக்கு லாபமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021ஐ தவிர்த்து, 2019 – 25 வரையிலான ஏழு ஆண்டுகளில் மத்திய அரசின் பங்கை மட்டும் அடிப்படையாக வைத்து கணக்கிட்டால், மாநிலங்களுக்கு ஒட்டுமொத்தமாக, 17 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் எனவும்,
மாநிலங்கள் தங்களின் 40 சதவீத பங்களிப்பை சிறப்பாக பயன்படுத்தினால், இன்னும் அதிக பலன்களை பெற வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட மத்திய – மாநில அரசின் நிதி பகிர்வு, மாநில அரசுகளை பலவீனப்படுத்தும் அல்லது கூடுதல் கடன் வாங்க துாண்டும் என்ற தகவல்கள் முற்றிலும் தவறானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















