வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் தங்கத் தேரோட்டம் நடைபெற்றது.
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் கடந்த 20ம் தேதி ஏகாதசி விழா தொடங்கி பகல் பத்து உற்சவ விழாக்கள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அவ்வழியாக செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதையொட்டி இன்று காலை தங்கத் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தங்கத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கம் எழுப்பினர்.
















