வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில் சில நாட்களுக்கு முன்பு மாணவர் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினரே காரணம் என குற்றம் சாட்டப்பட்ட நிலையில், பல்வேறு நகரங்களில் வன்முறை வெடித்தது.
குறிப்பாக, இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன. அண்மையில், மைமென்சிங் பகுதியைச் சேர்ந்த திபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக, சாட்டோகிராம், பிரோஜ்பூர் மாவட்டங்களில் 10க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன.
இதுதொடர்பான 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்களால் வங்கதேசத்தில் பதற்றம் நிலவுகிறது.
















