வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி, உலக பிசிரத்தி பெற்ற திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
அதன் பிறகு பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என விண்ணதிர பக்தி முழக்கம் எழுப்பினர்.
மேலும், இந்நிகழ்வில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குடும்பத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் ரங்கநாயக்க மண்டபத்தில் அவருக்கு வேத, ஆசிர்வாதங்கள் முழங்க பிரதாங்கள் வழங்கப்பட்டன.
















