தமிழகத்தில் 2025ஆம் ஆண்டில் நாய்க்கடியால் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கால்நடைத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக கால்நடைத்துறை வெளியிட்டுள்ள தகவலில், மாநிலம் முழுவதும் 25 லட்சம் தெரு நாய்கள் இருக்கலாம் என்றும், சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர பகுதிகளை காட்டிலும், கிராமப்புறங்களில் நாய்க்கடி பாதிப்பும், உயிரிழப்புகளும் அதிகம் என்றும், நாய்க்கடியால் கடந்தாண்டு 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, 43 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்தாண்டை ஒப்பிடுகையில், நடப்பாண்டு ரேபிஸ் உயிரிழப்பு குறைவாக இருந்தாலும், பாதிப்பு 6 லட்சத்து 50 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகக் கால்நடைத்துறை தெரிவித்துள்ளது.
















