ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக, பேக்கரிகளில் கேக் விற்பனை களைகட்டியது.
தருமபுரி நகரில் உள்ள ஒரு பேக்கரியில் நூற்றுக்கணக்கான கேக்குகள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கபட்டுள்ளன.
பல்வேறு வடிவங்களில், பல்வேறு நிறங்களில் தயார் செய்யப்பட்டுள்ள இந்தக் கேக்குகள் அரை கிலோ முதல் 6 கிலோ வரை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் பிளாக் பாரஸ்ட், ஒயிட் பாரஸ்ட், ஹனி கேக், ஐஸ்கிரீம் கேக், ஜெர்மன் பிளாக் பாரஸ்ட், சாக்கோ டிராபி, சாக்கோ சிப்ஸ் உள்ளிட்ட பல்வேறு சுவைகளில் உருவாக்கப்பட்டுள்ள கேக்குகளை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
















