சென்னை, ஆவடி அருகே இளைஞர் ஒருவர் இன்டர்நெட் கேபிள் மூலம் அறுபது அடி மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆவடி அருகே நெமிலிச்சேரியில் உள்ள மேம்பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவர் இன்டர்நெட் கேபிளை பிடித்து கீழே இறங்க முயன்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த வாகன ஓட்டிகள் அவரை எச்சரித்தனர். அதனை காதில் வாங்காத அந்த இளைஞர், கேபிளை பிடித்துக் கொண்டு அந்தரத்தில் தொங்கினார்.
பின்னர் அங்கு வந்த போலீசார், இளைஞரை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினர். அப்போது, கேபிள் அறுந்து கீழே விழுந்தது. இதில் சிறு காயங்களுடன் அந்த இளைஞர் மீட்கப்பட்டார்.
இந்நிலையில், அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவரா? அல்லது குற்றம் செய்துவிட்டு தப்பிக்க முயன்றாரா? எனப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
















