புதிய ரேஷன் கார்டுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களில், ஒரு லட்சத்து 71 ஆயிரம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் உணவு வழங்கல் துறை சார்பில் தகுதியான பயனாளிகளுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இம்மாதம் 27-ம் தேதி நிலவரப்படி புதிய ரேஷன் கார்டுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களில், ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 774 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
52 ஆயிரத்து 710 விண்ணப்பதாரர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க அதிகாரிகள் ஒப்புதல் அளித்து, இதுவரை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், புதிய ரேஷன் கார்டை விரைவாக வழங்க வேண்டும் என விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















