ஆங்கில புத்தாண்டையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் மாநகரில் 18 அடி உயரத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு காலையிலேயே பால், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து ஆஞ்சநேயர் 3 டன் எடையுள்ள பல்வேறு வகையான வண்ண மலர்களை கொண்டு புஷ்பாஞ்சலி அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
















