குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை, குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில், குடியரசு தலைவருக்கு, புத்தாண்டு வாழ்த்துகளை சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், தேச கட்டமைப்பில் கூட்டு பொறுப்புணர்வுக்கான தருணம் இது என குடியரசு துணை தலைவர் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
















