ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உலக நன்மை வேண்டி கும்பகோணம் அபி முகேஸ்வரர் கோயிலில் தைவான் நாட்டை சேர்ந்த பக்தர்கள் ஏகத்துவ மகா ருத்ர ஹோமம் செய்து வழிபட்டனர்.
தைவானை சேர்ந்த பத்து பேர் கொண்ட குழுவினர் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கும்பகோணம் மகாமகத்தின் வரலாறு மற்றும் தீர்த்தம் குறித்து அறிந்துள்ளனர்.
இதையடுத்து நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியைச் சேர்ந்த நாடி ஜோதிடர் சக்தி வினோத் ராஜா என்பவரை தொடர்பு கொண்டு கும்பகோணம் வந்தனர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உலக நன்மை வேண்டி கும்பகோணம் மகாமக குளம் அருகே அமைந்துள்ள அபி முகேஸ்வரர் திருக்கோவிலில் ஏகத்துவ மகா ருத்ர ஹோமம் செய்தும் கோபூஜை செய்தும் வழிபட்டனர்.
















