வங்கதேசத்தில் இரண்டு வாரங்களில் 4 இந்துகள் மீது வன்முறை கட்டவிழ்த்தப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இந்துக்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். குறிப்பாக, திபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஷரிதாப்பூரை சேர்ந்த மேலும் ஒரு இந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோகோன் சந்திர தாஸ் என்ற அந்த நபரை சரமாரியாக தாக்கிய மர்ம நபர்கள், பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.
இதில், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 வாரங்களில் நான்கு இந்துக்கள் தாக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
















