திருச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவுக்காக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள ராணுவ மைதானத்தில் வரும் 5 ஆம் தேதி நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ள உள்ளார்.
இந்நிலையில் விழாவுக்கான பந்தக்கால் நடைபெறும் நிகழ்ச்சி பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மிகப்பெரிய மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
















