ஆங்கில புத்தாண்டு காலண்டர் விற்பனை 400 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக அச்சக உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழிலுக்கு மட்டுமல்லாமல் காலண்டருக்கும் பிரசித்தி பெற்றது. இங்கு 300க்கும் மேற்பட்ட காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன.
15 ரூபாய் முதல் 2 ஆயிரத்து 500 வரை பல்வேறு விதங்களில் காலண்டர்கள் கிடைக்கும் நிலையில், கடந்த ஆண்டை விட சுமார் 10 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளதாக அச்சக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதான அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் லட்சக்கணக்கில் காலண்டர்களை ஆர்டர் செய்ததே விற்பனை உயர்வுக்கு முக்கிய காரணம் எனவும் கூறியுள்ளனர்.
மேலும், 2027 புத்தாண்டுக்கான காலண்டர் தயாரிப்பு பணிகள் வரும் ஏப்ரல் மாதம் தமிழ் பஞ்சாங்கம் வெளியானதும் தொடங்கும் என அச்சக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
















