இந்தியாவின் ஒட்டுமொத்த கலாசாரத்திற்கும் அடித்தளமாக தமிழ் கலாச்சாரமே இருப்பதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் எம்ஜிஆர் அறக்கட்டளை சார்பில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன். முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே, எம்ஜிஆர் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும், புதிய நீதி கட்சியின் தலைவருமான ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், இந்தியாவின் ஒட்டுமொத்த கலாசாரத்திற்கும் அடித்தளமாக தமிழ்க் கலாசாரம் இருப்பதால் பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழின் பெருமையை பேசி வருவதாக கூறினார். மேலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எம்ஜிஆர் சிலை அமைப்பது குறித்த கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் தெரிவித்தார்…
















