திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபாடு நடத்தினர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் விளங்குகிறது.
இங்கு மார்கழி மாத பெளர்ணமி தினத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பெளர்ணமி தினத்தை ஒட்டி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர்.
அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரே கற்பூரம் ஏற்றி 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.
















