திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவிலில், ஆசியாவிலேயே மிக உயரமான 217 அடி கொண்ட ராஜ கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம் என மொத்தம் 9 கோபுரங்கள் கம்பீரமாக காட்சியளிக்கின்றன.
இந்த கோபுரங்களில் செதுக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சிற்பங்கள் மற்றும் பரிவார மூர்த்திகள் பல நூற்றாண்டுகள் கடந்த கலைப்பொக்கிஷங்களாக விளங்குகின்றன.
இக்கோயிலின் கோபுர சிற்பங்கள் போதிய பராமரிப்பின்றி சேதமடைந்து வருவது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாதந்தோறும் உண்டியல் காணிக்கை மூலம் 4 கோடி முதல் 6 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் நிலையில், வருவாயை கணக்கெடுப்பதில் காட்டும் ஆர்வத்தை, கோபுரங்களைப் பராமரிப்பதில் இந்து சமய அறநிலையத்துறை காட்டுவதில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
















