திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயில் ராஜகோபுரத்தின் மீது மது போதையில் ஏறி தங்க கலசங்களை சேதப்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பதி ரயில் நிலையம் அருகே திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோயில் உள்ளது. இரவில் கோவில் நடை அடைக்கப்பட்டபின் தேவஸ்தான ஊழியர்கள், மாநில போலீசார், ஆயுதப்படை போலீசார் ஆகியோர் கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென ராஜகோபுரம் மீது ஏறி அங்கிருந்த தங்க கலசங்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் அந்த நபரை கீழே இறங்க செய்தனர்.
இதனையடுத்து மது போதையில் இருந்த அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் தெலங்கானா மாநிலம் நிஜமாவாத் மாவட்டதைச் சேர்ந்த திருப்பதி என்பது தெரியவந்தது.
















