இறை சக்திக்கு மீறிய சக்தி உலகில் எதுவுமில்லை என குடியரசு துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக தமிழகம் வந்துள்ளார். இந்நிலையில், வேலூர் அருகே உள்ள ஸ்ரீபுரம் பொற்கோயில் பீடாதிபதி சக்தி அம்மாவின் 50வது பிறந்த நாள் விழாவில் அவர் பங்கேற்றார்.
இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அவர், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே சக்தி அம்மாவின் சிந்தனை மற்றும் கோட்பாடு எனவும், ஆன்மிக சக்தியை யாராலும் ஒரு போதும் அழிக்க முடியாது என்றும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் எல்.முருகன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். குடியரசு துணைத் தலைவர் வருகையையொட்டி வேலூர் மாநகரம் முழுவதும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
















