புதிய அரசு அமையும்வரை, வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி நாடு கடத்தப்பட்ட நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய அதிபர் டிரம்ப், எனது வழிகாட்டுதலின் பேரில், அமெரிக்க ஆயுதப்படைகள் வெனிசுலாவின் தலைநகரில் ஒரு அசாதாரண ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டன என்றும், அமெரிக்க ராணுவ வலிமை, வான், நிலம் மற்றும் கடல் ஆகியவற்றைக் கொண்டு ஒரு அற்புதமான தாக்குதலைத் நடத்தியதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், வெனிசுலாவில் புதிய அரசு அமையும் வரை அந்நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என்றும் அறிவித்தார்.
















