வெனிசுலாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அறிவுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, இந்தியர்கள் வெனிசுலாவிற்கு அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், வெனிசுலாவில் உள்ள அனைத்து இந்தியர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எந்த காரணத்திற்காகவும் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
கராகஸில் உள்ள இந்திய தூதரகத்துடன் cons.caracas@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது +58-412-9584288 என்ற அவசர தொலைபேசி எண் (வாட்ஸ்அப் அழைப்புகளுக்கும்) மூலம் தொடர்பில் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
















