அரசியல் சூழலை பொறுத்து ஆட்சியில் பங்கு கேட்போம் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே புதிய இல்ல திறப்பு விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
தவெக கூட்டணியில் காங்கிரஸ் இணையுமா என்ற கேள்விக்கு, நாங்கள் இண்டியா கூட்டணியில் உள்ளோம். இந்திய அளவில் இண்டியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை தாங்குகிறது. தமிழ்நாட்டைப் பொருத்த வரை திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம் என்றார்.
ஆட்சியில் பங்கு கேட்பீர்களா என்ற கேள்விக்கு, அனைத்து கட்சிகளுமே தேர்தலில் நிற்பது ஆட்சிக்கு வருவதற்கு தான் என்றும் இல்லையென்றால்ல் பொது சேவை செய்துவிட்டு போலாமே என்றார்.
வேட்பாளர்கள் ஜெயித்தால் அரசாங்கத்தில் பங்கேட்க வாய்ப்பு கிடைத்தால் அனைத்து கட்சியினருமே கேட்பார்கள். அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கும் உண்டு. ஆனால் அது சூலலைப் பொருத்து அமையும் என்றும் கார்த்தி சிதம்பரம் கூறினார்.
















