அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து தென்மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் சென்னை திரும்பியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
12 நாட்கள் அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சென்னையில் வேலை பார்த்த மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
இந்நிலையில் விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனையொட்டி தென்மாவட்டங்களில் இருந்து மக்கள் மீண்டும் சென்னை நோக்கி படையெடுத்தனர்.
இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் சாலையில் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.
இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி சுங்கச்சாவடியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்…
















