சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட 650 இடைநிலை ஆசிரியர்கள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை சிவானந்தா சாலையில், 10வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.
இந்நிலையில், 10வது நாள் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் 650 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம், இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
















