கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே புதுவகையான பள்ளிப்படை நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடுத்தகுரும்பட்டி பகுதி விவசாய நிலத்தில் நடுக்கல் கிடைத்தது.
அதனை கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் தொன்மை இயல் ஆய்வு நிறுவனத்தினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பள்ளிப்படைக் கோயில்கள் தனியாகவும் நடுகற்கள் தனியாகவுமே இதுவரை இருந்ததாக கூறிய வல்லுநர்கள், தமிழகத்தில் இரண்டும் இணைந்து இதுவரை இப்படி ஒருநடுகல் ஆவணப்படுத்தப்படவில்லை என தெரிவித்தனர்.
















