கிட்னி திருட்டு வழக்கில் தலைமறைவான திமுக முன்னாள் அமைச்சரின் மருமகனை மகாராஷ்டிரா போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் நெசவுத் தொழிலாளர்களிடம் கிட்னி திருட்டு நடந்த சம்பவத்தில் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கிட்னி திருட்டு வழக்கை விசாரித்து வந்த தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா, கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆவடி கமிஷனராக பொறுப்பேற்றதால், கிட்னி திருட்டு வழக்கு விசாரணை முடங்கும் நிலை ஏற்பட்டது.
இதனிடையே, மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயிகளிடமும் தமிழகத்தை சேர்ந்த கும்பல் கிட்னி திருட்டு நடத்தியது தெரியவந்தது.
திருச்சியில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைகளில் மகாராஷ்டிரா விவசாயிகளுக்கு சட்ட விரோதமாக அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது குறித்தும், கிட்னி வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் மருமகன் ராஜரத்தினத்துக்கு தொடர்பு இருப்பது குறித்தும் விசாரணை நடத்த மகாராஷ்டிரா போலீசார் திருச்சியில் முகாமிட்டுள்ளனர்.
மேலும், தலைமறைவாக உள்ள திமுக முன்னாள் அமைச்சர் செல்வராஜின் மருமகன் ராஜரத்தினத்தை மகாராஷ்டிரா போலீசார் தேடி வருகின்றனர்.
















