வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து வரும் நிலையில், ஜெனைதா மாவட்டத்தில் ஹிந்து விதவைப் பெண் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெனைதா மாவட்டத்தின் காளிகஞ்ச் பகுதியில் வசிக்கும் 40 வயதான ஹிந்து விதவைப் பெண் ஒருவரை, கடந்த சனிக்கிழமையன்று அவரது அண்டை வீட்டார்களான ஹசன் மற்றும் ஷாகின் ஆகிய இருவர் கடத்திச் சென்றுள்ளனர். அவர்கள் அந்தப் பெண்ணை ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அதோடு நில்லாமல், அந்தப் பெண்ணை ஒரு மரத்தில் கட்டி வைத்து, அவரது தலைமுடியை வெட்டி, உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்து மிகக் கொடூரமான முறையில் சித்ரவதை செய்துள்ளனர்.
தற்போதைய முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் கீழ், சிறுபான்மை ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
















