கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் சென்னையில் கோழி இறைச்சியின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோழிக்கறி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு உரிய கூலி உயர்வு வழங்கப்படாமல், கோழிப்பண்ணை உரிமையாளர்கள் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை கண்டித்து, கடந்த 1ஆம் தேதி முதல் கோழிக்கறி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதன் காரணமாக, சென்னையில் ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கோழி இறைச்சி, தற்போது 80 ரூபாய் உயர்ந்து 280 ரூபாய் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விலை உயர்வு நடுத்தர மற்றும் ஏழை மக்களை கடுமையாக பாதித்துள்ளதாகவும் கூறியுள்ளனர். வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக வரும் நாட்களில் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
















