பூமியின் வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜன், நீர்த்துளிகள் போன்ற துகள்கள் பூமியின் காந்தப்புலத்தின் உதவியுடன் பல கோடி ஆண்டுகளாக நிலவுக்குப் பயணம் செய்து வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பூமிக்கும், சந்திரனுக்கும் இடையேயான ஆழமான மற்றும் சிக்கலான தொடர்பு குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பூமி நாம் நினைத்ததை விட நிலவின் சூழலை வடிவமைப்பதில் மிகவும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பூமியின் வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜன், நீர்த்துளிகள் போன்ற துகள்கள் பூமியின் காந்தப்புலத்தின் உதவியுடன் பல கோடி ஆண்டுகளாக நிலவுக்குப் பயணம் செய்து வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சூரியக் காற்றினால் தள்ளப்படும் இந்தத் துகள்கள், விண்வெளியில் ‘Magnetic Highway’ வழியாக நிலவின் மேற்பரப்பை அடைந்து அங்கேயே தங்கிவிடுவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்தத் துகள்கள் மூலம் நிலவில் நீர் மற்றும் ஆக்சிஜனை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விஞ்ஞானிகள் தற்போது தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
















