மாணவர் சேர்க்கையில் முஸ்லிம்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த குற்றச்சாட்டில், ஜம்முவில் உள்ள ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி மருத்துவ கல்லூரியின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்துள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் ரியாசியில் அமைந்துள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவக் கல்லுாரியை, ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோயில் நிர்வாகம் நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையை தொடங்கிய இக்கல்லூரிக்கு ஐம்பது மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் அவற்றில் 42 இடங்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த கல்லூரி நிர்வாகம் உரிய விதிகளை பின்பற்றவில்லை எனக் குற்றம்சாட்டிய இந்து அமைப்புகள், துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்து புகாரளித்தனர்.
இதனைத் தொடர்ந்து இக்கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்த தேசிய மருத்துவ ஆணையம், அங்கு படிக்கும் மாணவர்களை வேறு கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது.
















