பிற விலங்குகளுக்கு உயிர் இல்லையா? கோழிகள், ஆடுகள் வாழ வேண்டாமா? என்று தெருநாய்கள் ஆர்வலர்களுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வெறி நாய்க்கடி மற்றும் அதனால் ரேபிஸ் நோய் ஏற்பட்டு நாட்டில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து அதனை வழக்காக எடுத்துக் கொண்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள், நாய்கள் கடிக்காமல் இருக்கலாம், ஆனால் அதனால் விபத்துகள் ஏற்படுகின்றன என்றும், சாலைகள், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் அருகே நாய்கள் இருப்பதால் என்ன பயன் எனவும் கேள்வி எழுப்பினர்.
















