3 ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழகம் முழுவதும் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகளை, சென்னை ஆலந்தூரில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக்கரும்பு ஆகியவற்றுடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்கம் சேர்த்து வழங்கப்பட உள்ளதாக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
















