பெங்களூரு – விஜயவாடா இடையே மேற்கொள்ளப்படும் என்எச்-544ஜி வழித்தடத்தில், 24 மணி நேரத்தில் 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைத்து தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்தில் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
பெங்களூரு – விஜயவாடா இடையே 19 ஆயிரத்து 320 கோடி ரூபாய் செலவில் என்எச்-544 ஜி வழித்தடத்தில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதில், சத்யசாய் மாவட்டத்தில் புட்டபர்த்தி அருகே 24 மணி நேரத்தில் 28.95 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில், தொடர்ச்சியாக பிட்மினஸ் கான்கிரீட்டை பயன்படுத்தி சாலை அமைத்து, சாலை கட்டுமான பணியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
















