பொங்கல் பரிசு டோக்கன் வீடு தேடி கொடுக்கப்படும் என்று கூறிய நிலையில் சென்னை பெரும்பாக்கத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் ஒரே இடத்தில் வைத்து டோக்கன் விநியோகித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் 3 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடி டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னை பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பகுதியில் ரேஷன் கடை ஊழியர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் வரவழைத்து டோக்கன் வழங்கினர்.
இதனால் மக்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்து சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
















