கிரிக்கெட் வீரர் அர்ஜூன் டெண்டுல்கருக்கு வரும் மார்ச் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர். இவருக்கு மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரவி காயின் மகள் சானியா சாந்தோக் என்பவருடன் வரும் மார்ச் மாதம் 5-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவ நிபுணராக பணியாற்றி வரும் சானியாவுடன், அர்ஜூனுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதாகவும், இருவரின் திருமண நிகழ்ச்சிகள் வரும் மார்ச் 3-ம் தேதி தொடங்கும் எனவும் அவர்களது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் மும்பையில் நடைபெறவுள்ள அர்ஜூன் – சானியா ஜோடி திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















