சத்ரபதி சிவாஜி குறித்து புத்தகத்தில் ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்ட விவகாரத்தில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பதிப்பகம் மன்னிப்பு கோரியுள்ளது.
அந்த கடிதத்தில் புத்தகத்தின் 31, 33, 34 மற்றும் 93வது பக்கங்களில் ஸ்ரீ சத்ரபதி சிவாஜி மகாராஜ் பற்றிய சில தகவல்கள் ஆதாரமற்றவை என்பதை ஒப்புக்கொள்கிறோம் என்றும், இதற்காக நாங்கள் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்காக, உதயன்ராஜே போஸ்லே மற்றும் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
















