தேர்தல் நேரத்தில் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைப்பது வழக்கம் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் கே.என்.நேரு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். தொடர்ந்து புதிய பேருந்துகளின் சேவையையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தேர்தல் நேரத்தில் அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டை முன் வைப்பது வழக்கம் என தெரிவித்தார். மேலும் தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
















