திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் நிகழ்வு அனுமதிச்சீட்டினை கள்ளச்சந்தையில் 11 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த வீடியோ வைரலாகி உள்ளது.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படக்கூடிய ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகுவிமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு கடந்த 30ஆம் தேதி அதிகாலை நடைபெற்றது.
இந்நிகழ்விற்காக கோயில் நிர்வாகம் சார்பாக அனுமதிச்சீட்டு 400 ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அனுமதிச்சீட்டை கள்ளச் சந்தையில் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சொர்க்கவாசல் திறப்பு நாள் அன்று அனுமதிச்சீட்டை 10 ஆயிரம் முதல் 11 ஆயிரம் ரூபாய் வரை கோயில் பணியாளர்கள் விற்பனை செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
















