அமெரிக்காவின் மினசொட்டா மாகாணத்தில் குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு போலீசாரால் பெண் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.
மினியாபோலிஸ் நகரில் குடியேற்ற அமலாக்க நடவடிக்கையின் போது, 37 வயதுடைய ரெனீ நிக்கோல் மேக்ளின் குட் என்ற பெண் தனது குடும்பத்தினர் முன்னிலையில் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பலரும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போராட்டக்காரர்களின் முகத்தின் மீது அதிகாரிகள் வண்ண புகை குண்டுகளை வீசி கலைத்தனர்.
இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளன. இந்த சம்பவங்களை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும், பேரணிகளும் நடைபெற்று வருகின்றன.
















