வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய நபர் இமாம் கைது செய்யப்பட்டார்.
கடந்த மாதம் 18ம் தேதி வங்கதேசத்தின் மைமன்சிங் மாவட்டத்தில் உள்ள பாலுகா பகுதியில் தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் வன்முறை கும்பலால் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக 150 பேர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான யாசின் அராபத் என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 12 நாட்கள் தலைமறைவாக இருந்த அவர், மசூதியில் இமாமாக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
















