பவானிசாகர் அணையில் இருந்து புன்செய் பாசனத்திற்காக கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு கீழ்பவானித் திட்டப் பிரதானக் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்படும் என அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, கீழ்பவானி பிரதான கால்வாயில் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மூலமாக பாசன நிலங்களுக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இன்று முதல் 111 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும், நீர்திறப்பு படிப்படியாக அதிகரித்து 2 ஆயிரம் கன அடி வரை உயர்த்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நீர்திறப்பால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் என கூறியுள்ளனர்.
















